தூத்துக்குடியில், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம் திறப்பு விழா அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன்-கடம்பூர் ராஜூ பங்கேற்பு

தூத்துக்குடியில், இந்து சமய அறநிலையத்துறை  மண்டல இணை ஆணையர் அலுவலகம் திறப்பு விழா அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன்-கடம்பூர் ராஜூ பங்கேற்பு
x
தினத்தந்தி 11 Feb 2021 8:24 PM IST (Updated: 11 Feb 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டனர்.
இணை ஆணையர் அலுவலகம் திறப்பு
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் தமிழகத்தில் 9 மண்டல இணை ஆணையர் அலுவலகங்கள் ரூ.9 கோடி மதிப்பில் தொடங்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை தூத்துக்குடியில் நேற்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். 
வாரிசுகளுக்கு வேலை
இந்தவிழாவுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி பூவனநாதர் சுவாமி கோவில் மற்றும் தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை குமாரசாமி கோவில்களில் பணிபுரிந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும், குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் பணியாற்றிய ஊழியர் குடும்பத்திற்கு குடும்ப நலநிதியையும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார். 
கலந்து கொண்டவர்கள்
இந்த விழாவில், திருச்செந்தூர் கோவில் செயல் அலுவலர் மற்றும் இணை ஆணையர் விஷ்ணு பிரசாத், மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, மாநகராட்சி கமிஷனர் சரண்யா அரி, உதவி ஆணையர் ரோஜாலிசுமதா, சின்னப்பன் எம்.எல்.ஏ.  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story