விளாத்திகுளத்தில் குடோனில் பதுக்கிய ரூ.3½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் மளிகை கடைக்காரர் கைது
விளாத்திகுளத்தில் குடோனில் பதுக்கிய ரூ.3½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளத்தில் குடோனில் பதுக்கிய ரூ.3½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
கடைகளில் திடீர் சோதனை
விளாத்திகுளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விளாத்திகுளம் பகுதியில் உள்ள கடைகளில் போலீசார் நேற்று முன்தினம் இரவில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது விளாத்திகுளம் பாரத ஸ்டேட் வங்கி அருகில் உள்ள ஜெயராஜ் (வயது 45) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரூ.3½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
மேலும் ஜெயராஜிக்கு சொந்தமான குடோன், விளாத்திகுளம் பத்திரகாளி அம்மன் கோவில் அருகில் உள்ளது. அந்த குடோனிலும் சென்று போலீசார் சோதனை நடத்தினர். அங்கு ஏராளமான மூட்டைகளில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கிருந்த புகையிலை பொருட்கள் அடங்கிய மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.3½ லட்சம் ஆகும். இதுதொடர்பாக ஜெயராஜை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story