திருச்செந்தூர் அருகே நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு


திருச்செந்தூர் அருகே  நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 11 Feb 2021 10:14 PM IST (Updated: 11 Feb 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே படகில் என்ஜின் பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே படகில் என்ஜின் பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மீனவர்கள் 
திருச்செந்தூர் அருகே அமலிநகரை சேர்ந்த மீனவர்கள் விஜயபாஸ்கர் (வயது 38), ஸ்டீபன் (42), மணிவண்ணன் (48), பவித்ரன் (23). இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் அதிகாலை வழக்கம்போல் படகில் மீன்பிடிக்க சென்றனர். மாலை வரை அவர்கள் கரை திரும்பவில்லை. 
இதையடுத்து அமலிநகர், ஆலந்தலை, மணப்பாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 3 படகுகளில் சென்று மாயமான மீனவர்களை தேடினர். 
பத்திரமாக மீட்பு 
அப்போது படகில் ஏற்பட்ட பழுது காரணமாக, விஜயபாஸ்கர், ஸ்டீபன் உள்ளிட்ட 4 பேரும் நடுக்கடலில் தத்தளித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை மீட்டு, படகில் பழுதடைந்த என்ஜினுக்கு பதிலாக மாற்று என்ஜினை பொருத்தி அமலிநகர் கடற்கரைக்கு அழைத்து வந்தனர்.
அவர்களுக்கு ஊர் மக்கள், பங்குதந்தை ரவீந்திரன், வருவாய்த்துறையினர், போலீசார் வரவேற்பு கொடுத்து ஆறுதல் தெரிவித்தனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆறுதல்
அமலிநகருக்கு மீட்டு அழைத்து வரப்பட்ட மீனவர்கள் 4 பேரையும் நேற்று காலை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 
அப்போது தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன்
அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணனும் மீனவர்கள் 4 பேரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். 
அப்போது அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஆறுமுகநேரி நகர செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story