எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு ஆயுள் தண்டனை
மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நாகர்கோவில்,
மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
எல்லை பாதுகாப்பு படை வீரர்
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரத்தை சேர்ந்தவர் உதய மார்த்தாண்டம். இவருடைய மகன் ரதீஷ் (வயது 26), எல்லை பாதுகாப்பு படை வீரராக இருந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு அவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது ரதீசுக்கும், நாகர்கோவிலை சேர்ந்த 10-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பலாத்கார வழக்கில் கைது
அந்த சமயத்தில் திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி, இதுகுறித்து தனது பெற்றோாரிடம் கூறி அழுதுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுதொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதனைதொடர்ந்து அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி, ரிதீஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
ஆயுள் தண்டனை
இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி எழில் வேலவன், நேற்று தீர்ப்பு கூறினார். அதில், ரதீஷை குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு வக்கீலாக முத்துகுமாரி ஆஜரானார்.
Related Tags :
Next Story