சாலையோர குப்பையில் திடீரென தீ பிடித்தது


சாலையோர குப்பையில் திடீரென தீ பிடித்தது
x
தினத்தந்தி 11 Feb 2021 11:00 PM IST (Updated: 11 Feb 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

சாலையோரத்தில் உள்ள குப்பையில் திடீரென தீ பிடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

கரூர்
குப்பையில் திடீர் தீ
கரூரிலில் இருந்து நெரூர் செல்லும் சாலையில் பஞ்சமாதேவி கிராமம் உள்ளது. இந்த பஞ்சமாதேவி கிராமம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கானோர் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் பஞ்சமாதேவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எதிரே உள்ள சாலை் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.  இதில் பிளாஸ்டிக் பைகள், வாழை மட்டைகள், வீட்டு உபயோக கழிவுபொருட்கள் என பல்வேறு பொருட்களை கொட்டி உள்ளனர். இந்நிலையில் நேற்று சிலர் அந்த குப்பைக்கு திடீரென தீ வைத்துள்ளனர்.
வாகன ஓட்டிகள் அவதி 
 இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் சிரமப்பட்டு சாலையில் கடந்து செல்ல வேண்டியிருந்தது. இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு புகையால் கண் எரிச்சல் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளானர்.
எனவே சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீதும், தீ வைத்து எரித்தவர்கள் மீதும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story