தலையில்லா முண்டம் போல் வந்து ஹெல்மெட் விழிப்புணர்வு
புதுவையில் தலையில்லா முண்டம் போல் வந்து ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புதுச்சேரி,
புதுவையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்திராகாந்தி சிலை அருகே நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அதாவது தலையில்லா முண்டம் ஒன்று இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வது போன்றும், வாகனத்தின் பெட்ரோல் டேங்கின்மேல் கழற்றி வைக்கப்பட்ட ஹெல்மெட்டிற்குள் துண்டிக்கப்பட்ட தலை இருப்பது போன்றும் ஒருவரை ஏற்பாடு செய்து வாகனத்தை ஓட்ட செய்தனர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அச்சமடைந்தனர். அவர்களிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இதுபோல் நூதனமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தெரிவித்தனர். போக்குவரத்து விதிகள் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
Related Tags :
Next Story