சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 11 Feb 2021 6:12 PM GMT (Updated: 11 Feb 2021 6:14 PM GMT)

தை அமாவாசையையொட்டி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும், மற்ற விேசஷ நாட்களிலும் கோவில் நடை திறப்பது வழக்கம். நேற்று தை அமாவாசை என்பதால் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் அம்மனை தரிசனம் செய்ய அதிகாலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வரத்தொடங்கினர். மதியம் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்ததை காண முடிந்தது. தை அமாவாசையையொட்டி கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் மாவட்ட பகுதிகளில் உள்ள கோவில்களிலும் தை அமாவாசைையயொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

Next Story