அம்மா மினி கிளினிக் தொடக்கம்


அம்மா மினி கிளினிக் தொடக்கம்
x
தினத்தந்தி 11 Feb 2021 11:44 PM IST (Updated: 11 Feb 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

தோகைமலை அருகே அம்மா மினி கிளினிக் தொடக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

தோகைமலை
தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லடை ஊராட்சி, கல்லடையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில், ேபாக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து ெகாண்டு அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசுகையில், கல்லடை பொதுமக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தோகைமலைக்கு தான் சிகிச்சைக்காக செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனை கருத்தில் கொண்டும், இப்பகுதி மக்களின் நலன்கருதியும் கல்லடையில் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நோயாளிகள் இனி இங்கேயே சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றார். இந்த அம்மா மினி கிளினிக் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையும், அதன்பிறகு மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் செயல்படுகிறது.

Related Tags :
Next Story