வீடு புகுந்து 32 பவுன் நகைகள் திருட்டு


வீடு புகுந்து 32 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 12 Feb 2021 12:17 AM IST (Updated: 12 Feb 2021 12:17 AM IST)
t-max-icont-min-icon

குன்றக்குடி அருகே வீடு புகுந்து 32 பவுன் நகைகள் திருடப்பட்டன.

காரைக்குடி,

குன்றக்குடி போலீஸ் சரகம் நெசவாளர் காலனி 2-வது வீதியைச் சேர்ந்தவர் கோபால் (வயது 32).இவர் சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பிய கோபால் வீட்டிலேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு மனைவி மற்றும் கைக்குழந்தையோடு பள்ளத்தூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் 2 நாட்கள் கழித்து கோபால் வீடு திரும்பிய போது முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த கோபால் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 32 பவுன் நகைகள், ¼ கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை காணவில்லை. மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story