திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்


திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர்  கோவிலில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 12 Feb 2021 12:28 AM IST (Updated: 12 Feb 2021 12:28 AM IST)
t-max-icont-min-icon

திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தளி:
தை அமாவாசையையொட்டி திருமூர்த்தி அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் திரளாக கூடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மும்மூர்த்திகள்
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் திருமூர்த்திமலை உள்ளது. 
இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக ஒரே குன்றில் மும்மூர்த்திகளாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகள் தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிப்பது தமிழகத்தில் வேறெங்கும் காண முடியாது.
தை அமாவாசை
இதனால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் நாள்தோறும் திருமூர்த்தி மலைக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.கோவில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்த கன்னிகள் மற்றும் நவகிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள்.
 நேற்று நடைபெற்ற தை அமாவாசை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மதியம் முதல் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் குதிரைகள் மற்றும் மாடுகள் பூட்டிய வண்டியில் வந்தனர்.பின்னர் அவர்கள் இரவு முழுவதும் பெருமாள் கோவில் மற்றும் அணைப் பகுதியில் தங்கிக்கொண்டனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
பின்னர் நேற்று அதிகாலையில் எழுந்து பஞ்சலிங்க அருவிக்கு சென்று குளித்துவிட்டு மூர்த்திகளை சாமி தரிசனம் செய்தனர்.ஒரு சிலர் தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் கோவில் மற்றும் அருவி பகுதியில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. 
 நேற்று பூலாங்கிணரில் இருந்து வருகை தந்த கட்டளைதாரர்கள் கோவிலின் மீது சேதமடைந்த சப்பரத்தை புதுப்பிப்பதற்காக எடுத்துச்சென்றனர். தை அமாவாசையையொட்டி தளி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குமரலிங்கம்
குமரலிங்கம் பகுதியில் தங்களுடைய முன்னோர்களுக்கு அமராவதி ஆற்றில் குளித்து தர்ப்பணம் செய்து ஏராளமானோர் வழிபாடு செய்தனர். அப்போது அங்கிருந்த காகம், நாய், மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்து வழிபாடு செய்தனர்.

Next Story