விருதுநகரில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்
விருதுநகரில் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்.
விருதுநகர்,
பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், விருதுநகர் அருகே உள்ள சங்கரலிங்காபுரத்தில் இருந்து விருதுநகருக்கு வந்த டவுன் பஸ்சில் அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவர்கள் நேற்று வந்தனர். இந்த பஸ் விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே செவல்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்ற போது மாணவர்கள் இறங்கிக் கொண்டிருந்தனர்.
மாணவர்கள் அனைவரும் இறங்குவதற்கு முன்பே டிரைவர் பஸ்சை நகர்த்தி விட்டதால் பஸ்சிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் சிலர் கீழே விழுந்தனர். இதில் சேடப்பட்டியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சூரியபிரகாஷ் (வயது 18), கன்னிசேரியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் அபிஷேக் (14), 10-ம் வகுப்பு மாணவர் கஜேந்திர பரணி (15) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 3 மாணவர்களையும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சூலக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொதுவில், பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பஸ்களில் பயணம் செய்வதால் பஸ் நிறுத்தங்களில் மாணவர்கள் ஏறி இறங்கிய பின்பு பஸ்சை நகர்த்துமாறு பஸ் ஊழியர்களுக்கு போக்குவரத்துக் கழக நிர்வாகம் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story