திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 Feb 2021 12:38 AM IST (Updated: 12 Feb 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர்,பிப்
ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் செக்கடி தெருவைச் சேர்ந்தவர் பேச்சியப்பன் (வயது 52). இவரது இளைய மகன் மோகன் (25). ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார். அவர் தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளார்.
கடந்த 10-ந்தேதி தனக்கு உடனே திருமணம் செய்து வைக்குமாறு சண்டை போட்டுள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்கள் அண்ணனுக்கு திருமணம் முடித்து வைத்துவிட்டு உனக்கு செய்து வைக்கிறோம் என்று சமாதானம் செய்துள்ளனர். இதனால் விரக்தியுடன் காணப்பட்ட மோகன் வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிவிட்டு மின் விசிறியில் சேலையை மாட்டி தூக்குப்போட்டுக் கொண்டார்.
வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று மோகனை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மோகனை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பேச்சியப்பன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story