மோட்டார்சைக்கிள் திருட்டு


மோட்டார்சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 12 Feb 2021 1:08 AM IST (Updated: 12 Feb 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே மோட்டார்சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த தருவை இந்திரா காலனியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 22). இவர் பொருட்கள் வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் முன்னீர் பள்ளம் சென்றார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பொருட்களை வாங்கினார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மோட்டார் சைக்கிளை திருடியது பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்த முனியசாமி (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முனியசாமியை கைது செய்தனர்.

Next Story