உரிகம் அருகே கரடி கடித்து வனக்காப்பாளர் காயம்
உரிகம் அருகே கரடி கடித்து வனக்காப்பாளர் காயம் அடைந்தார்.
தேன்கனிக்கோட்டை:
உரிகம் அருகே கரடி கடித்து வனக்காப்பாளர் காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரடி கடித்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா உரிகம் வனப்பகுதிக்கு உட்பட்டது அனுகுளி. இதன் அருகில் உள்ள மல்லஹள்ளி காப்புக்காட்டில் வனக்காப்பாளர் நாராயணன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது புதருக்குள் குட்டியுடன் ஒரு கரடி மறைந்து இருந்தது. அந்த கரடி திடீரென்று வனக்காப்பாளர் நாராயணன் மீது பாய்ந்து அவரது வலது காலை கடித்தது. இதில் காயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். அப்போது அருகில் இருந்த வன ஊழியர்கள் அந்த கரடியை விரட்ட முயன்றனர். இதனால் குட்டியுடன் அந்த கரடி காட்டுக்குள் சென்று விட்டது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இந்த நிலையில் கரடி கடித்து காயம் அடைந்த வன காப்பாளர் நாராயணனை வன ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக உரிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். உரிகம் அருகே கரடி கடித்து வனக்காப்பாளர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story