5 பேருக்கு கொரோனா


5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Feb 2021 1:43 AM IST (Updated: 12 Feb 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசியில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நெல்லை;

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் நெல்லை மாநகர பகுதியை சேர்ந்தவர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 545 ஆக உயர்ந்துள்ளது. இதில் 15 ஆயிரத்து 377 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது 54 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 214 பேர் இறந்துள்ளனர். 

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 ஆயிரத்து 276 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இதில் நேற்று 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது 32 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மொத்தம் 159 பேர் இறந்துள்ளனர். 

Next Story