அரசு பஸ் கடைக்குள் புகுந்தது


அரசு பஸ் கடைக்குள் புகுந்தது
x
தினத்தந்தி 12 Feb 2021 1:50 AM IST (Updated: 12 Feb 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே அரசு பஸ் கடைக்குள் புகுந்தது

உசிலம்பட்டி
தேனியில் இருந்து ஏர்வாடிக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் உசிலம்பட்டி அருகே கொங்கபட்டி என்னும் இடத்தில் வந்தபோது அந்த வழியாக நகராட்சி வாகனம் மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் திருப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்தது. இதில் பஸ்சில் பயணித்த டிரைவர் நல்லுத்தேவன் மற்றும் சிலரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அரசு பஸ் டிரைவரின் இந்த துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து  உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story