மொபட் மீது கார் மோதியதில் வனக்காவலர் பலி


மொபட் மீது கார் மோதியதில் வனக்காவலர் பலி
x
தினத்தந்தி 12 Feb 2021 1:50 AM IST (Updated: 12 Feb 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

மொபட் மீது கார் மோதியதில் வனக்காவலர் பலியானார்

வாடிப்பட்டி
சோழவந்தான் அருகே ராயபுரம் திருமால்நத்தம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஆனந்தரட்சகன்(வயது 52). இவர் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் உள்ள சோழவந்தான் வனத்துறை வனசரகர் அலுவலகத்தில் வனக்காவலராக வேலை பார்த்து வந்தார். நேற்று குட்லாடம்பட்டி அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டதால் அங்கு அவர் ரோந்து காவல் பணியில் இருந்தார். அப்போது மாலை 4 மணிக்கு ஆண்டிபட்டி பங்களாவில் உள்ள அலுவலகத்திற்கு செல்வதற்காக தனது மொபட்டில் வந்தார். விராலிப்பட்டி பிரிவில் வந்தபோது மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் மொபட்டின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆனந்தரட்சகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியாஜாஸ்மின், சப்-இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story