சாலை மறியல்


சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Feb 2021 2:03 AM IST (Updated: 12 Feb 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

சாலை மறியல்

மேலூர்
மேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்தில் உள்ள பேப்பனையன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரணன். இவரது மகன் வெள்ளைச்சாமி (வயது 29). கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவருக்கும், உறவுக்கார பெண்ணான பவானி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.  நேற்று முன்தினம் பூதமங்கலம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வெள்ளைச்சாமியை ஆடு திருடிய கும்பல் ஒன்று கொலை செய்துவிட்டு தப்பியது. இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் கொலையாளிகளை கைது செய்ய கோரி உடலை வாங்க மறுத்து மேலூரில் நான்கு வழி சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்திற்கு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன் தலைமை தாங்கினார். மேலூர் பிரசாத், தளவாய் ராஜேஷ், வலையங்குளம் நடராஜன், தி.மு.க.வை சேர்ந்த பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  அப்போது வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் உடனே கைது செய்ய வேண்டும். அரசு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்தனர்.  இவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story