மாணவ மாணவிகள் உண்ணாவிரதம்


மாணவ மாணவிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 12 Feb 2021 2:10 AM IST (Updated: 12 Feb 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

2017-18-ம் ஆண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்:
2017-18-ம் ஆண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
உண்ணாவிரத போராட்டம் 
தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கி வருகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டில் படித்த பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு தமிழகஅரசு உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் தஞ்சையில் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை பனகல் கட்டிடம் அருகே இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி தலைமை தாங்கினார். போராட்டத்தினை தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
மடிக்கணினி வழங்க வேண்டும் 
போராட்டத்தில் கடந்த 2017-18 ம் ஆண்டில் படித்த மாணவர்களைத் தவிர அனைத்து ஆண்டுகளிலும் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு இலவச மடிக்கணினியை வழங்கியுள்ளது. விடுபட்டுள்ள இந்த மாணவர்களுக்கு மட்டும் இதுவரை மடிக்கணினி வழங்கவில்லை. எனவே விடுபட்ட மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.
இதில் 2017-18-ம் ஆண்டு படித்து தற்போது கல்லூரிகளில் படித்து வரும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
முடிவில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலகுரு நன்றி கூறினார்.

Next Story