வளநாடு அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம்
வளநாடு அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம்
துவரங்குறிச்சி,
வளநாட்டை அடுத்த ஊனையூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையால் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். எனவே டாஸ்மாக் கடையை உடனே அகற்றிட வலியுறுத்தி நேற்று பா.ஜனதா கட்சியினர் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த மருங்காபுரி தாசில்தார் ஜெயப்பிரகாசம், டாஸ்மாக் மேலாளர் பார்த்தீபன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து பா.ஜனதா கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 45 நாட்களில் கடையை மாற்றுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story