தீரன் நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தொழிலாளர்களுக்கான ஓய்வு அறை திறப்பு

தீரன் நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தொழிலாளர்களுக்கான ஓய்வு அறை திறப்பு
x
தினத்தந்தி 12 Feb 2021 2:17 AM IST (Updated: 12 Feb 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

தீரன் நகர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தொழிலாளர்களுக்கான ஓய்வு அறை திறப்பு

சோமரசம்பேட்டை, 
தீரன் நகரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தொழிலாளர்களுக்கான ஓய்வு அறை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டிடத்தை அமைச்சர் வளர்மதி திறந்து வைத்தார். விழாவில் போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் எஸ்.எஸ். ராஜ்மோகன், துணை மேலாளர்கள் ஜூலியஸ் அற்புத ஆயர், சிங்காரவேலு, சதீஷ்குமார், ரெங்கராஜ் மற்றும் கிளை மேலாளர் ரவி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story