நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கனிமொழி எம்பி நாளை மறுநாள் சுற்றுப்பயணம்
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. நாளை மறுநாள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
நாமக்கல்,
‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் தி.மு.க. முன்னணி தலைவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இது குறித்து கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது :-
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்யும் கனிமொழி எம்.பி.க்கு ராசிபுரம் ரவுண்டானா அருகில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது. பின்னர் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். காலை 8.40 மணிக்கு நாமகிரிப்பேட்டை ஒன்றியம் வெங்கச்சங்கல் மேடு பகுதியில் கொடி ஏற்றுகிறார். காலை 9.30 மணிக்கு நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட தி.மு.க.வின் மூத்த முன்னோடிகளை சந்திக்கிறார். காலை 9.45 மணிக்கு சீராப்பள்ளி பேரூராட்சியில் தி.மு.க. கொடி ஏற்றுகிறார்.
கலந்துரையாடல்
தொடர்ந்து காலை 10 மணிக்கு நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் 1, 000 பெண்கள் கனிமொழி எம்.பி., முன்னிலையில் தி.மு.க.வில் இணைகிறார்கள். காலை 10.40 மணிக்கு முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். மதியம் 12 மணிக்கு அத்தனூர் பேரூராட்சியில் விசைத்தறி நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார். 12.30 மணிக்கு பிள்ளாநல்லூர் சந்தையில் காய்கறி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார். பிற்பகல் 2.30 மணிக்கு காளப்பநாயக்கன்பட்டியில் விவசாயிகளுடன் கலந்துரையாடும் கனிமொழி எம்.பி., மாலை 3.45 மணிக்கு குப்பநாயக்கனூரில் தி.மு.க. கொடியை ஏற்றுகிறார்.
திருமண நிகழ்ச்சி
மாலை 4 மணிக்கு காந்திபுரத்தில் குத்து சண்டை வீரர்களை சந்திக்கிறார். பின்னர் 4.15 மணிக்கு நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள அலுவலகத்தில் லாரி சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகிறார். இரவு 7 மணிக்கு தொப்பூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story