குற்றாலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்


குற்றாலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x
தினத்தந்தி 12 Feb 2021 2:35 AM IST (Updated: 12 Feb 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

தை அமாவாசையையொட்டி குற்றாலத்தில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தென்காசி:

தை அமாவாசையை முன்னிட்டு குற்றாலத்தில் நேற்று முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தை அமாவாசை

தை அமாவாசையை முன்னிட்டு நேற்று குற்றாலத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதற்காக குற்றாலம் மெயின் அருவிக்கரையில் அதிகாலையில் இருந்தே அர்ச்சகர்கள் காத்திருந்தனர்.

கொரோனா காலத்தில் வந்த ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வந்த மஹாளய அமாவாசைகளில் தர்ப்பணம் வழிபாடு நடைபெறாத நிலையில் நேற்று தை அமாவாசையில் தர்ப்பண வழிபாடுகள் எவ்வித கட்டுபாடுகளுமின்றி நடைபெற்றது. 

வழிபாடு

மெயின் அருவியில் தண்ணீர் மிகவும் குறைவாக விழுவதால் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று குளித்துவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினார்கள். இதனை முன்னிட்டு அருவிக்கரையில் அதிகமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story