புதுவை தலைமை செயலாளர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்


புதுவை தலைமை செயலாளர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்
x
தினத்தந்தி 12 Feb 2021 2:48 AM IST (Updated: 12 Feb 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இன்று காலை 10 மணிவரை புதுவை மாநிலத்தில் 4 ஆயிரத்து 770 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

புதுச்சேரி, 

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உயர் அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் புதுவை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் நேற்று அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டார். மேலும் கவர்னரின் சிறப்பு செயலாளர் சுந்தரேசனும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

ஊசிபோட்டு சிறிதுநேரம் ஆஸ்பத்திரியில் இருந்த அவர்கள் அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் அருண், அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவன் ஆகியோர் உடனிருந்தனர்.

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 366 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 22 பேர் குணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story