கல்விக்கட்டணத்தை குறைக்கக்கோரி 6-வது நாளாக மருத்துவ கல்லூரி மாணவா்கள் போராட்டம் பெருந்துறை வழியாக சென்ற முதல்- அமைச்சரிடம் மனுவும் அளித்தனர்
கல்விக்கட்டணத்தை குறைக்கக்கோரி 6-வது நாளாக பெருந்துறை மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பெருந்துறை வழியாக சென்ற தமிழக முதல்-அமைச்சா் எடப்பாடி பழனிசாமியிடம் மனுவும் அளித்தனர்.
பெருந்துறை
கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி 6-வது நாளாக நேற்றும், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள், தங்களுடைய வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ கல்லூரியில் உள்ள கலை அரங்கில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தியபடி பேனரை கைகளில் ஏந்தி இருந்தனர்.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து திருப்பூருக்கு நேரில் காரில் சென்றார். காலை 10 மணி அளவில், முதல்- அமைச்சரின் கார் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50 பேர் கூடி நின்று, முதல்- அமைச்சருகக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரும் மனுவை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், மாணவர்கள் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் இதற்கு தீர்வு காணப்படும், என்றார். இதையடுத்து, திருப்பூருக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story