தண்ணீர் தொட்டியில் விழுந்த கரடி மீட்பு
மசினகுடி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த கரடி மீட்கப்பட்டது.
கூடலூர்,
மசினகுடி அருகே பொக்காபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் தண்ணீர் இன்றி கிடந்த தொட்டிக்குள் கரடி தவறி விழுந்தது. அப்போது அந்த வழியாக ரோந்து வந்த வனத்துறையினர் பார்த்து, அதனை மீட்கும் நடவடிக்கையை எடுத்தனர்.
தொடர்ந்து தொட்டிக்குள் கிடந்த கரடிக்கு வாளியில் தண்ணீர் மற்றும் பழங்கள் வழங்கினர். பின்னர் மரக்கட்டைகள் கொண்டு ஏணி அமைத்து, தொட்டிக்குள் இறக்கினர். அதன் வழியாக கரடி வெளியே வந்தது.
தொடர்ந்து வனப்பகுதிக்குள் ஓடியது. அது 3 வயதான ஆண் கரடி என்பதும், உணவு தேடி வந்தபோது தொட்டிக்குள் தவறி விழுந்ததும் தெரியவந்தது.
Related Tags :
Next Story