ஊத்துக்கோட்டை அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
ஊத்துக்கோட்டை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊத்துக்கோட்டை,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி புதுடெல்லியில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊத்துக்கோட்டை அருகே உள்ள சீதஞ்சேரியில் நடைபெற்ற போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வக்கீல்கள் பிரிவு மாநில துணைத் தலைவரும், தொலைபேசி ஆலோசனை குழு உறுப்பினருமான இமாலய அருண்பிரசாத் தலைமை தாங்கினார். இதில் மெழுகுவர்த்தி ஏந்தி பெரும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தெற்கு வட்டார தலைவர் பழனி, வடக்கு வட்டார பொறுப்பாளர் வக்கீல் ரஞ்சித் குமார், மாவட்ட செயலாளர் ராஜா, துணைத்தலைவர் அருள்மொழி, மகளிர் அணி துணைத் தலைவர் பாரதி, எஸ்.சி., எஸ்.டி பிரிவு செயலாளர் குப்பன், இளைஞரணி துணைச்செயலாளர் அலெக்ஸ் பாண்டியன், பொதுசெயலாளர் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story