தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாதோ என்ற விரக்தியில் பிளஸ்-1 மாணவர் தற்கொலை


தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாதோ என்ற விரக்தியில் பிளஸ்-1 மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 12 Feb 2021 10:19 AM IST (Updated: 12 Feb 2021 10:19 AM IST)
t-max-icont-min-icon

பாடங்கள் புரியாததால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாதோ என்ற விரக்தியில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்குன்றம்,

சென்னை கொளத்தூர் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் பிரவீன்(வயது 16). இவர் சென்னை கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது தனது தாயின் புடவையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது, கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வகுப்பில் பாடம் படித்து வந்தார். ஆனால் அதில் பாடங்கள் புரியாமல் தவித்தார். தற்போது பள்ளிகள் திறந்தாலும், பாடங்கள் புரியாமல் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாதோ என்ற விரக்தியில் தற்கொலை செய்தது தெரிந்தது.

Next Story