காளை விடும் விழா
தட்டப்பாறை கிராமத்தில் காளை விடும் விழா நடந்தது.
குடியாத்தம்
தட்டப்பாறை கிராமத்தில் காளை விடும் விழா நடந்தது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தட்டப்பாறை கிராமத்தில் காளை விடும் திருவிழா இன்று நடைபெற்றது,
இதில் குடியாத்தம், கே. வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 230 காளைகள் கலந்துகொண்டன. காளை ஓடும் வீதிகளின் இரு பகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்ற காளைகள் சீறிப் பாய்ந்து சென்றன. இந்த காளை விடும் திருவிழாக்கு ஊர் முக்கிய பிரமுகர்கள் தலைமை தாங்கினார்கள்.
விழாவை குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், தாசில்தார் வத்சலா ஆகியோர் தொடங்கி வைத்தனர். வருவாய் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காளைகள் முட்டியதில் காயமடைந்தவர்களை அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது, வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,
காளைவிடும் போட்டிகளைகான குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்காணோர் திரண்டனர். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், தட்டப்பாறை, சின்னாலப்பல்லி கிராம பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story