ராமநாதபுரத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் 66 பேர் கைது
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் மறியலில் ஈடுபட்ட ரேஷன்கடை பணியாளர்கள் 66 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் மறியலில் ஈடுபட்ட ரேஷன்கடை பணியாளர்கள் 66 பேர் கைது செய்யப்பட்டனர்.
கண்டனம்
ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைகடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினருக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், தனித்துறை ஓய்பூதியம், பயோமெட்ரிக் இணைப்பு சர்வர் பிரச்சினை தீர்வு உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில துணை தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் பழனீஸ்வரன், கோவிந்தன் ஜெகநாதன், மாவட்ட இணை செயலாளர்கள் சேதுபாண்டி, மாரிமுத்து, ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மறியல்
மாவட்ட செயலாளர் ஞானசேகரன் வரவேற்று பேசினார். மாநில இணை செயலாளர் மாரிமுத்து, டாஸ்மாக் சங்க மாநில இணை செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ரேஷன்கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை தடுத்து 20 பெண்கள் உள்பட 66 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story