ஓட்டல் உரிமையாளர்களை தாக்கி ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


ஓட்டல் உரிமையாளர்களை தாக்கி ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
x
தினத்தந்தி 12 Feb 2021 6:31 PM IST (Updated: 12 Feb 2021 6:31 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டல் உரிமையாளர்களை தாக்கி ரூ.20 ஆயிரம் கொள்ளை

சேத்துப்பட்டு

கத்தியைகாட்டி மிரட்டினர்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நம்பேடு கிராமம், ரோடு தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது25), அதே கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் (23). இவர்கள் இருவரும் நம்பேடு கிராமத்தில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். கடந்த 10-ந்் தேதி இரவு இவர்களுடைய ஓட்டலுக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்தனர்.

ஓட்டல் உரிமையாளர் பிரசாந்திடம் சென்று டிபன் இருக்கிறதா என்று கேட்டனர். அதற்கு அவர் டிபன் இல்லை என்று கூறியிருக்கிறார். திடீரென்று அந்த நபர்கள், பிரசாந்த் மற்றும் வினோத்குமார் ஆகிய இருவரையும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

ரூ.20 ஆயிரம் கொள்ளை

மேலும் அவர்கள் இருவரையும் தாக்கி, ஓட்டலில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் 3 செல்போன்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். 

உடனே பிரசாந்த் மற்றும் வினோத்குமார் இருவரும் கூச்சலிட்டுள்ளனர். அவர்களுடைய சத்தத்தைகேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தலைமறைவாகி விட்டனர்.

6 பேருக்கு வலைவீச்சு

உடனடியாக இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சேத்துப்பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற 6 பேரை தேடி வருகின்றனர்



Next Story