வந்தவாசி அருகே பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வந்தவாசி அருகே பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வந்தவாசி
வீட்டுமனை பட்டா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தை சேர்ந்த 10 பேர் அதேப்பகுதியில் கீழ்சீஷமங்கலம் ஊராட்சிக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் வீடுகட்டி வசித்து வருகிறார்கள். அந்த இடத்துக்கு பட்டா வழங்கக்கோரி கடந்த 14 ஆண்டுகளாக மனுகொடுத்து வருகின்றனர்.
இந்்த நிலையில் விண்ணப்பித்த 10 பேரில் 5 நபர்களுக்கு மட்டும் பட்டா வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மற்ற 5 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அந்த இடத்தை தோட்டக்கலைத் துறைக்கு ஒதுக்க அளவீடு செய்ததாக கூறப்படுகிறது.
சாலைமறியல்
இதை அறிந்ததும் பட்டா கிடைக்காதவர்கள், தாங்கள் பயன்படுத்தி வரும் இடத்துக்கு, தங்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என்றும், தோட்டக்கலைத்துறைக்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது என்று கூறியும் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் காரணமாக வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story