வராகி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா
வராகி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மகா வராகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை கடைசி வெள்ளிக்கிழமையை யொட்டி பித்ரு தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம் விலக அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு விழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 108 மண் கலயங்களில் பெண் பக்தர்கள் மஞ்சள் நீரை சுமந்து நான்கு ரத வீதிகளை வலம் வந்தனர். தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பால் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. புனித மஞ்சள் நீரால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த மகா வராகி அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார் உத்தரவின் பேரில் திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் பேஸ்கார் கண்ணன், கோவில் ஸ்தானிகர் மங்கள பட்டர் மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Related Tags :
Next Story