இனாம் மணியாச்சியில் ரூ.22.45 லட்சத்தில் குடிநீர் வழங்கும் திட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்


இனாம் மணியாச்சியில் ரூ.22.45 லட்சத்தில் குடிநீர் வழங்கும் திட்டம் அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 12 Feb 2021 9:26 PM IST (Updated: 12 Feb 2021 9:26 PM IST)
t-max-icont-min-icon

இனாம் மணியாச்சியில் ரூ.22.45 லட்சத்தில் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.

கோவில்பட்டி:
இனாம் மணியாச்சியில் ரூ.22.45 லட்சத்தில் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.
குடிநீர் திட்டம்
கோவில்பட்டியை அடுத்துள்ள இனாம்மணியாச்சி பஞ்சாயத்து இந்திராநகர், அத்தை கொண்டான், சீனிவாச நகர் பகுதிகளில் கணிமம் மற்றும் சுரங்க நிதியின் கீழ் ரூ.22.45 லட்சத்தில் 6 இடங்களில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைதொட்டி கட்டி குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 
அம்மா மினி கிளினிக்
இதனைத் தொடர்ந்து தோணுகால் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா கலெக்டர் தலைமையில் நடந்தது. அமைச்சர், அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். 
தொடர்ந்து 14-வது நிதி குழு திட்டத்தில் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
கலந்து கொண்டவர்கள் 
நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், தாசில்தார் மணிகண்டன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செந்தூர்பாண்டியன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா, பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் சசிகுமார், பொறியாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் சந்திரசேகர், தங்கமாரியம்மாள், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணை தலைவர் பழனிசாமி,  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் கணேஷ் பாண்டியன், இனாம் மணியாச்சி கூட்டுறவு சங்கத்தலைவர் மகேஷ்குமார், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story