ஒரேநாளில் 20 ஆயிரம் பேர் சாமி தரிசனம்
தை அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஒரேநாளில் 20 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகத்தினர் கூறினர்.
வத்திராயிருப்பு,
தை அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஒரேநாளில் 20 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகத்தினர் கூறினர்.
சுந்தர மகாலிங்கம் கோவில்
வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
20 ஆயிரம் பேர்
தை அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை முதலே பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவியத்தொடங்கினர்.
பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல கேட் திறக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது. தை அமாவாசை அன்று ஒரே நாளில் 20 ஆயிரத்திர்க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக ேகாவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story