ராஜாக்கமங்கலம் யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ராஜாக்கமங்கலம் யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2021 11:25 PM IST (Updated: 12 Feb 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ராஜாக்கமங்கலம், 
ராஜாக்கமங்கலம் யூனியன் கூட்டம் தலைவர் அய்யப்பன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புஷ்பலதா, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும் போது ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி வழங்கவில்லையென என கூறினர். அதற்கு பதிலளித்த தலைவர் அய்யப்பன், 504 பேரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது, அதில் 254 பேருக்கு வருகிற திங்கட்கிழமை பறக்கை அருகே ஒரு மண்டபத்தில் வைத்து உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மற்றவர்களுக்கு அடுத்து 10 நாளில் வழங்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், பாரத பிரதமரின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்க ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மாறுபட்ட தொகை வசூலிப்பதாக குற்றம்சாட்டி கவுன்சிலர்கள் உமா ஸ்டாலின், மேரி கேத்தரினாள், ஹென்றித் மினி, சரவணன் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தலைவர் அய்யப்பன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் குடிநீர் இணைப்புக்கு பணம் வசூலிப்பது பற்றி பஞ்சாயத்து நிர்வாகக் குழுக்கள் தான் முடிவெடுக்கும் என்று கூறினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் ஹேமா, ஜெயா, ஷகிலா, மேரி தமிழரசி, சுனில், மாரிமுத்து மற்றும் மேலாளர் ஜாண்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story