சீரம் நிறுவன தீ விபத்துக்கு மின்கசிவு தான் காரணம் அஜித்பவார் பேட்டி
சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்கசிவு தான் காரணமாக இருக்கும் என அஜித்பவார் கூறியுள்ளார்.
மும்பை,
கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து தயாரித்து வரும் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தில் கடந்த மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியானார்கள். எனினும் இந்த விபத்தால் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்தநிலையில் தீ விபத்து நடந்த சீரம் நிறுவனத்தை துணை முதல்-மந்திரி அஜித்பவார் பார்வையிட்டார். அப்போது அவருடன் மூத்த அதிகாரிகள் இருந்தனர். அப்போது அஜித்பவார் கூறியதாவது.
தீ விபத்து நடந்த வளாகம் காலியாக இருந்தது. அங்கு வேலை நடந்து வந்து இருக்கிறது. இது தனியார் நிறுவனம். அவா்கள் தணிக்கை செய்து கொண்டு இருக்கின்றனர். அரசும் விசாரணை நடத்தி வருகிறது. மின்கசிவை தவிர வேறு எதுவும் தீ விபத்துக்கு காரணமாக இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் சிவாஜி ஜெயந்தியை அமைப்புகள், கட்சிகள் எளிமையாக கொண்டாட வேண்டும், கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கலந்து கொள்ள கூடாது என்றார்.
Related Tags :
Next Story