சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி108 ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி


சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி108 ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 12 Feb 2021 11:54 PM IST (Updated: 12 Feb 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி108 ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அனுப்பர்பாளையம்:
சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று 22-வது நாளையொட்டி 108 ஆம்புலன்சு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி குமார் தலைமை தாங்கினார். 
இதில் 108 ஆம்புலன்சு மருத்துவ குழுவினர், ஊழியர்கள் கலந்து கொண்டு, ஓட்டுனர் பயிற்சி உரிமம், ஓட்டுனர் உரிமம், உரிமம் புதுப்பிக்க வந்தவர்கள் என 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு 108 தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அப்போது அவசர தேவை எதுவாக இருந்தாலும் எந்த நேரத்திலும் 108-ஐ அழைக்கலாம் என்றும், ஆம்புலன்சில் நவீன உபகரணங்களுடன் கூடிய அனைத்து வசதிகளும் இருப்பதால் விபத்து நேரங்களில் தயங்காமல் உடனடியாக 108 ஆம்புலன்சை பொதுமக்கள் அழைக்க வேண்டும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வேலுமணி, சித்ரா உள்பட வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள், வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர். 

Next Story