வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள்


வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள்
x
தினத்தந்தி 13 Feb 2021 12:07 AM IST (Updated: 13 Feb 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். 
நெற்பயிர்கள் மூழ்கின
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு வாரம் தொடர் மழை இரவு பகலாக பெய்தது. இதனால் குடியிருப்புகளை சுற்றியும், தாழ்வான பகுதிகளிலும், வயல்களிலும் மழை நீர் தேங்கியது. தொடர் மழையால் திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை களையிழந்தது. மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை பெய்த போது பலத்த காற்றும் வீசியதால் பொங்கல் பண்டிகைக்கு முன்பே அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து மூழ்கின.
அறுவடை 
இதனால் கூத்தாநல்லூர் பகுதிகளில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் மழைநீரை மிகவும் சிரமப்பட்டு வெளியேற்றினர். தற்போது தரையோடு தரையாக சாய்ந்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். சாதாரணமாக அறுவடைக்கு தயாராகும் நெற்பயிர்கள், நேராக நிற்கும் போது அறுவடை செய்வது எளிதானது. ஆனால், தரையோடு தரையாக சாய்ந்த நெற்பயிர்களை அறுவடை செய்வது மிகவும் சிரமம் ஆகும். மகசூலும் குறையும்.  செலவும் அதிகமாகும். எனவே தரையோடு தரையாக சாய்ந்த நெற்பயிர்களை எப்படி அறுவடை செய்வது? என்ற தவிப்பில் கூத்தாநல்லூர் பகுதி விவசாயிகள் உள்ளனர். 

Next Story