ஆலம்பட்டியில் ஆக்கிரமிப்பு
சின்ன ஆலம்பட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
தரகம்பட்டி
தரகம்பட்டி அருகே உள்ள சின்னாம்பட்டியிலிருந்து வினோபாஜிபுரம் செல்லும் சாலையோரம் உள்ள நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டது. இந்தநிலையில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விவசாய சங்கங்கள் சார்பில், அதன் மாவட்ட பொருளாளர் ராமமூர்த்தி தலைமையில் வருகிற 17-ந் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, நேற்று கடவூர் தாசில்தார் சக்திவேல், பாலவிடுதி வருவாய் அலுவலர் சண்முகம் ஆகியோர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்றி சுமார் 3 நிலத்தை மீட்டனர். இதனையடுத்து, நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Tags :
Next Story