வரத்து வாய்க்காலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வாலிபர்கள்


வரத்து வாய்க்காலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வாலிபர்கள்
x
தினத்தந்தி 13 Feb 2021 1:14 AM IST (Updated: 13 Feb 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

அன்னமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்காலை சீரமைக்கும் பணியில் வாலிபர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஏரிக்கு அரசலூர் மற்றும் விசுவக்குடி அணையில் இருந்து தண்ணீர் வரும் வாய்க்கால்களில் புல், புதர் மண்டி மண்மேடாக உள்ளது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வரத்து பெருமளவில் குறைந்தது. இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏரிக்கு தண்ணீர் வரக்கூடிய வரத்து வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், வரத்து வாய்க்கால் சீரமைக்கப்படவில்லை.இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள், தாங்களாகவே வரத்து வாய்க்காலை சீரமைக்க முன்வந்தனர். இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரங்களை கொண்டு விசுவக்குடி அணையில் இருந்து தண்ணீர் வரும் வாய்க்காலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அந்த வாலிபர்கள் கூறுகையில், எங்களால் முடிந்தவரை ஓரளவு வரத்து வாய்க்காலை சீரமைப்பு செய்கிறோம். அரசு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து அன்னமங்கலம் ஏரிக்கு தண்ணீர் வரக்கூடிய வாய்க்கால்களை முழுமையாக சீரமைத்து தரவேண்டும், என்றனர்.

Next Story