கண்ணில் பஞ்சு வைத்து மூடி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கண்ணில் பஞ்சு வைத்து மூடி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2021 1:15 AM IST (Updated: 13 Feb 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பாசன கடனை தள்ளுபடி செய்யக்கோரி கண்ணில் பஞ்சு வைத்து மூடி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய நீர்ப்பாசன கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, கடன் தள்ளுபடி செய்ததில் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும், ஒரு கண்ணுக்கு வெண்ணையும் வைத்ததாக கூறி ஒரு கண்ணில் பஞ்சு வைத்து மூடி, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நீர்ப்பாசன கடனை தள்ளுபடி செய்ததை போன்று, முதல்-அமைச்சர் அந்த கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், என்று வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Next Story