ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2021 1:19 AM IST (Updated: 13 Feb 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை, 

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புதுக்கோட்டை மாவட்ட கிளை சார்பில் காந்தி பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் செபஸ்டியான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சகாய அருள்சாமி கோரிக்கையை விளக்கி பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் செபாஸ்டியன் குழந்தைராஜ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி அனைத்திலும் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Next Story