நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 Feb 2021 1:27 AM IST (Updated: 13 Feb 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

நெல்லை:

பாளையங்கோட்டையை அடுத்த படப்பக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த இளையபெருமாள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், செயலாளர் நாகராஜ், தமிழர் விடுதலை களத்தை சேர்ந்த லெனின் ஆகியோர் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் விஷ்ணுவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘படப்பக்குறிச்சி பகுதியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். நாங்கள் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்காக அருகே உள்ள திருவண்ணநாதபுரம் வழியாக செல்ல வேண்டியது உள்ளது. அவ்வாறு அந்த வழியாக செல்லும்போது எங்கள் மீது அந்தப்பகுதியில் தாக்குதல் நடத்துகின்றனர். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவதூறாக பேசி உள்ளனர். எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்து இருந்தனர்.

Next Story