பங்களாப்புதூர் அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
பங்களாப்புதூர் அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
டி.என்.பாளையம்
பங்களாப்புதூர் அருகே சிறுமியை கர்ப்பிணியாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிறுமி பலாத்காரம்
டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் திடீரென மாயமானார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தார்கள். அதன்பின்னர் சில மாதம் முன்பு போலீசார் சிறுமியை மீட்டனர். இந்தநிலையில் சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது. இதுபற்றி மகளிடம் பெற்றோர் விசாரித்தபோது, வெள்ளி திருப்பூர் மாக்களூரை சேர்ந்த சண்முகம் (வயது 49) என்பவர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்திருந்தது தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார்கள். அதன்பேரில் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சண்முகம் கொளப்பலூரில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருவது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் சண்முகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்கள்.
Related Tags :
Next Story