நெல்லையில் மனித உரிமை ஆணையம் 2-வது நாளாக விசாரணை
நெல்லையில் மனித உரிமை ஆணையம் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தியது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் மனுக்கள் அனுப்பப்படுகின்றன. அந்த மனுக்கள் மீதான விசாரணை, நெல்லை அரசு சுற்றுலா மாளிகையில் நேற்று முன்தினம் தொடங்கியது. மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து நேற்று 2-வது நாளாக நீதிபதி துரை ஜெயச்சந்திரன் 44 மனுக்கள் மீது விசாரணை நடத்தினார். இதில் வக்கீல்கள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு வாதாடினார்கள். தொடர்ந்து இந்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற ஜூன் மாதம் 25-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story