ஒரே கிராமத்தில் 3 பேர் பலி
சாத்தூர் அருகே நடைபெற்ற வெடி விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே நடைபெற்ற வெடி விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
சோகத்தில் மூழ்கிய கிராமம்
சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி பலியாகினர்.
இதில் பலியானவர்களில் 3 பேர் நடுச்சூரங்குடிய சேர்ந்த கற்பக வள்ளி, செல்வி, கருப்பசாமி ஆவர். மற்றவர்கள் உடல் மிகவும் கருகிய நிலையில் அடையாளம் கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது.
ஒரே கிராமத்தில் 3 பேர் பலியானதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
எம்.எல்.ஏ.க்கள் ஆறுதல்
வெடி விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் ராஜவர்மன் எம்.எல்ஏ. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்கும் பணிகளை பார்வையிட்டாா்.
வெம்பக்கோட்டை ஒன்றிய துணைத்தலைவர் ராமராஜ் பாண்டியன், எதிர் கோட்டை மணிகண்டன், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், ஏழாயிரம்பண்ணைஇன்ஸ்பெக்டர் பாலாஜி, வெம்பக்கோட்டை தீயணைப்பு அலுவலர் கந்தையா மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அவர்களுடன் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எதிர் கோட்டை ஜெயபாண்டியன், ஏழாயிரம்பண்ணை கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் கடற்கரை ராஜ், நகர செயலாளர் குருசாமி ஆகியோரும் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story