கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 13 Feb 2021 1:58 AM IST (Updated: 13 Feb 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் கோவில் உண்டியலை மர்மநபர்கள் பணத்தை திருடிச் சென்றனர்.

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் உள்ள எழில்நகர் பகுதியில் சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சங்கரன்கோவில் டவுன் போலீசார்  வழக்குப்பதிவு செய்து, உண்டியல் பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story