காதலர் தினத்தையொட்டி கொய்மலர்கள் ஏற்றுமதி


காதலர் தினத்தையொட்டி கொய்மலர்கள் ஏற்றுமதி
x
தினத்தந்தி 13 Feb 2021 2:06 AM IST (Updated: 13 Feb 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

காதலர் தினத்தையொட்டிகொடைக்கானலில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கொய்மலர்கள் ஏற்றுமதிசெய்யப்பட்டுவருகிறது

கொடைக்கானல்:
உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதில் காதலர்கள் தங்களது அன்பை பரிமாறிக்கொள்ள மலர்களை அதிகளவில் பரிசாக வழங்குவது வழக்கம்

 இதற்காக தற்போது பல்வேறு வகையான கொய் மலர்கள், ரோஜாக்கள் ஆகியவை கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான கவுஞ்சி, மன்னவனூர், பழம்புத்தூர் போன்ற பகுதிகளில் ஏராளமான அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவை தற்போது பெங்களூரு, மும்பை, கொல்கத்தா போன்ற பல்வேறு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

 அங்கிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. 
இந்த ஆண்டு கொய்மலர்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். 

மேலும் கொரோனா அச்சம் காரணமாக  சாகுபடி செய்யப்பட்ட பூக்களை வாங்குவதற்குகூட அதிகளவு வியாபாரிகள் முன்வரவில்லை என அவர்கள் கூறினர்

. இந்நிலையில் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக தற்போது காதல் ஜோடிகள் கொடைக்கானலுக்கு வரத்தொடங்கியுள்ளனர்.

Next Story