செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி
செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது
மதுரை
மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் செல்லப் பிராணிகளுக்கான இலவச ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி முகாமை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராஜதிலகன் நேற்று காலை தொடங்கி வைத்தார். துணை இயக்குனர் ரவிச்சந்திரன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமை முன்னிட்டு ஏராளமானோர்கள், தங்களது வீடுகளில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் வைரவசாமி, கால்நடை உதவி மருத்துவர்கள் முத்துராமன், அறிவழகன், விஜயகுமார், முத்துராம், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சண்முகத்தாய், நிர்மலா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story